SLEFO LogoSLEFO
நாங்கள் யார்

உலகத் தரமான வாய்ப்புகளுக்கு வாயில் திறத்தல்

உலகெங்கிலுமுள்ள தமது சமவயது மாணவர்களுக்குக் கிடைக்கும் அதே வாய்ப்புகள் இலங்கை மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உறுதியுடன் செயற்படும் ஒரு சிறிய தன்னார்வக் குழுவினால் SLEFO நடத்தப்படுகிறது. போட்டி எமது நிறைவேற்றுச் சபையின் மேற்பார்வையில் இயங்குகிறது.

“பாடசாலை, மொழி அல்லது பின்னணி எதுவாயினும், திறமையான ஒவ்வொரு இலங்கை மாணவருக்கும் பொருளியலின் உலக மேடையில் ஒரு உண்மையான வாய்ப்பை வழங்குவது.”

எமது பொறுப்பு

நாங்கள் செய்வது

01

தெரிவு

இலங்கை முழுவதிலுமுள்ள சிறந்த இளம் பொருளியல், நிதி அறிவாளர்களை இனங்காண ஒரு தேசியத் தெரிவு ஒலிம்பியாட்டை நாம் நடத்துகிறோம் — இலவசம், முதற்கட்டச் சுற்று சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில்.

02

தயார்படுத்தல்

தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்குக் கோட்பாடு, பகுப்பாய்வு, அணிப்பணி ஆகியவற்றைக் கூர்மைப்படுத்தி, சிறந்தவர்களுடன் போட்டியிடப் பயிற்சியும் வழிகாட்டலும் வழங்கப்படுகிறது.

03

பிரதிநிதித்துவம்

சர்வதேச பொருளியல் ஒலிம்பியாட்டுக்குத் தேசிய அணியை அனுப்பி வழிநடத்தி, உலக மேடையில் எமது கொடியை உயர்த்துகிறோம்.

தலைமைத்துவம்

நிறைவேற்றுச் சபை

S

Shenal Kotuwewatta

பணிப்பாளர்
L

Luchitha Pathirana

உதவிப் பணிப்பாளர்
A

Adhni Ikram

உதவிப் பணிப்பாளர்
எமது அணிகளின் சாதனைகளைக் காண்க